ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

சித்தாந்த் சஜ்தேவ் இயக்கத்தில் சஞ்சய் தத், மவுனி ராய், சன்னி சிங், பலாக் திவாரி மற்றும் ஆசிப் கான் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛தி பூட்னி'. ஹாரர் கலந்த காமெடி படமாக உருவாகி உள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் சோஹம் ராக்ஸ்டார் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப்படம் இன்று தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த படத்திலிருந்து ‛ஆயா ரே பாபா' என்ற பாடல் வெளியிடப்பட்டது. இதை மிகா சிங் பாடி உள்ளார். அவருடன் அக்ஷய் இணைந்து ராப் பகுதிகளை பாடி, பாடல் வரிகளையும் எழுதி உள்ளார்.
இந்த பாடல் வெளியீட்டின்போது பேசிய நடிகர் சஞ்சய் தத், ‛‛இந்த பாடல் படத்துக்கு ஏற்ற வைப்பை தருகிறது. மீண்டும் மிகாவின் குரல் ஒரு மேஜிக்கை நிகழ்த்தி உள்ளது. இது கொஞ்சம் மெலோடி கலந்த பெப்பி பாடல். நான் அதன் படப்பிடிப்பை மிகவும் ரசித்தேன், இப்போது பார்வையாளர்கள் அதை ரசிக்க வேண்டும்'' என்றார்.